சூடான செய்திகள் 1

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 50 பேர் காயம்..

(UTV|COLOMBO) – ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பிரதேசத்தில், இன்று (12) நண்பகல் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சுமார் 50 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறையிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பயணிகள் பஸ்ஸும் தெஹியத்தகண்டியிலிருந்து காலி நோக்கிப் பயணித்த பஸ்ஸுமே, இவ்வாறு ​மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், குறித்த இரு பஸ்களின் சாரதிகள் உட்பட 50 பேர் காயமடைந்த நிலையில், லுனுகம்வெஹர, தெம்பரவெவ மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கொழும்பிலிருந்தே அதிகமான சிறுவர் வன்முறை குறித்த முறைப்பாடுகள்-சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் – விரைகிறது விசாரணைக்குழு

பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினரின் உறுப்புரிமை நீக்கம்