அரசியல்உள்நாடு

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான திருமதி. டபிள்யு. எம்.டீ.ரீ. விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டன.

டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள இதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் ( அனர்த்த முகாமைத்துவம்) பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியதோடு டபிள்யு. எம்.டீ.ரீ. விக்ரமசிங்க பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றியிருந்தார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டம் ஆரம்பம்

சிவனொளிபாத மலையில் 150 இளைஞர்கள் கைது