உள்நாடு

இரு அமைச்சுகளின் விடயதானங்களை மாற்றியமைத்து புதிய வர்த்தமானி

(UTV | கொழும்பு) – கைத்தொழில் மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் விடயதானங்களை மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

அதன்படி கைத்தொழில் அமைச்சின் கீழ் 15 நிறுவனங்களும் சுற்றாடல் அமைச்சின் கீழ் 5 நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய சுற்றாடல் அமைச்சுடன் இலங்கையின் காலநிலை நிதியம் இணைகிறது.

தற்போது உள்நாட்டின் கனிம வளங்களைப் பயன்படுத்தி நாட்டின் உற்பத்தி செயல்முறையை வலுப்படுத்துவது சுற்றுச்சூழல் அமைச்சின் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறை முன்பு கைத்தொழில் அமைச்சின் கீழ் இருந்த நிலையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் அது சுற்றுச்சூழல் அமைச்சுடன் இணைக்கப்படுகிறது.

Related posts

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக பூட்டு

10000 ரூபாய் பணம் வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

editor

தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை – ஜீவன் எம்.பி

editor