உள்நாடு

இருபதாவது திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவைக்கு

(UTV | கொழும்பு) – 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவரும் அமைச்சரவைப் பத்திரம் இன்று(03) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

மேலும், செப்டம்பரில் இரண்டாம் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் இறுதிக்குள் 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Related posts

நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் ஏற்றப்பட்டுள்ள சிக்கல்!

2025 ஆம் ஆண்டில் இத்தனை விடுமுறைகளா?

editor

கண்ணாடி பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து