உள்நாடு

இராணுவ சதித்திட்டத்தைத் தொடர்ந்து மியான்மாரை உன்னிப்பாகக் கண்காணிக்கும் இலங்கை

(UTV | கொழும்பு) – இராணுவ சதித்திட்டத்தைத் தொடர்ந்து மியான்மாரின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் என வெளி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே யாங்கோனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம், மியான்மரில் உள்ள இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், ஆதரவு தேவைப்படும் எந்தவொரு இலங்கையருக்கும் உதவத் தயாராக இருப்பதாகவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் வன்முறை அல்லது கலவர சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மியான்மாரின் சக்திவாய்ந்த இராணுவம் நேற்று சதித்திட்டத்தில் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி அவசரகால நிலையை அறிவித்தது, ஆங் சான் சூகி மற்றும் பிற மூத்த அரசாங்கத் தலைவர்கள் அதிகாலை சோதனைகளில் தடுத்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2026 முதல் பாடசாலை கல்வி தவணைகள் முறையாக நடைபெறும் – பிரதமர் ஹரினி அமரசூரிய

editor

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் விமானம்

editor

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்