உள்நாடு

இராணுவத்திலிருந்து விலகிய 10 ஆயிரம் பேருக்கு பொலிஸ் வேலை!

இராணுவ சேவையிலிருந்து சட்டபூர்வமாக ஓய்வுபெற்ற 45 வயதுக்கு உட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், இவ்வான நபர்களை 5 ஆண்டுகளுக்குச் சேர்ப்பதற்கான தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், போதைப்பொருளுக்கு அடிமையாகும் அபாயத்தில் உள்ள சுமார் 7,880 சிறுவர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Related posts

தேர்தல் காலங்களில் அரசாங்கம் காட்டிய அதே அன்பை இப்போதும் காட்டுங்கள் – சஜித் பிரேமதாச

editor

ஜனாதிபதி தேர்தல் போன்று ஸ்ரீ.சு.கட்சி சில உடன்படிக்கைகளுடன் களத்தில் இறங்கும்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு