உள்நாடுசூடான செய்திகள் 1

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்

(UTV | கொழும்பு) –  இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

55வது தலைமை அதிகாரியாக நேற்றைய தினம் அவர் பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதுவரை இந்தப் பொறுப்பை வகித்த மேஜர் ஜெனரல் சத்தியகீர்த்தி லியனகே ஓய்வு பெற்றதையடுத்தே மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன குறித்த பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் பதவியேற்ற பின்னர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வாவை சந்தித்திருந்தார்.

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன முன்னர் இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியாக கடமையாற்றியடையும் குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் – www.Army.lk

Related posts

கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அது கனவாகவே இருக்கும் – ஜனாதிபதி அநுர

editor

மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

editor

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு