சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சரின் கொக்கெய்ன் விவகார அறிக்கை- இன்று பிரதமரின் கரங்களுக்கு செல்கின்றது

(UTV|COLOMBO) கொக்கெய்ன் விவகாரம் குறித்த, ஐக்கிய தேசிய கட்சியின் குழுவினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அமைச்சரவையில் உள்ளவர்கள் கொக்கெய்ன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து, குறித்த விடயம் தொடர்பில் ஆராய ஐக்கிய தேசிய கட்சி குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழுவிற்கு சபை முதல்வர் அமைச்சர் லக்மன் கிரியெல்ல தலைமை தாங்குகிறார்.

இந்தநிலையில், அண்மையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் குறித்த குழு விசாரணைகளை நடத்தியிருந்தது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கையே இன்றைய தினம் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அந்த அறிக்கை காவற்துறையினரிடம் கையளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31ஆம் திகதிக்கு முன்பு…

நாலக சில்வா ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) கலந்துரையாடல்