உள்நாடு

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் ஆறு அடிக்கு திறந்துவிப்பட்ட நிலையில் வினாடிக்கு மொத்தம் 8,352 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அந்த திணைக்களம் கூறுகிறது.

இதேவேளை அங்கமுவ குளத்தின் இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடிக்கு திறந்துவிடப்பட்டு வினாடிக்கு 2,994 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறக்க நீர்ப்பாசனத் திணைக்களம் நேற்று நடவடிக்கை எடுத்தது.

மழைக்காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில், 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும்!!

2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தம் – சுசில் பிரேமஜயந்த.

நுவரெலியாவில் பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

editor