உள்நாடு

இரவு விடுதியில் மோதல் – சந்தேக நபர்கள் சிஐடியில் சரண்!

கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள இரவு விடுதியில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் சரணடைந்துள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கொம்பனி வீதி பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக யோஷித ராஜபக்க்ஷ நேற்று (25) கொம்பனி வீதி பொலிஸாரிடம் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலமளித்திருந்தார்.

இந்த மோதலில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டார்.

Related posts

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

விமலின் கட்சியிடமிருந்து இன்று அரசியல் தீர்மானம்

முகக்கவசம் இன்றேல் PCR பரிசோதனை