அரசியல்உள்நாடு

இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

இரத்தினபுரி மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு
அமைச்சின் மூலம் நிதியுதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு
பிரதி அமைச்சர்
சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றையதினம் (29) மாவட்ட இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார ஆகியோர் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இரத்தினபுரி மாவட்டத்தில் மலையக மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு காணிகளை வழங்கும்போது மக்களுக்கு வசதியான இடத்தை தெரிவு செய்வதற்கு அதிகாரிகள் கவணம் செலுத்த வேண்டும்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் அமைச்சின் மூலம் தேவையான நடவடிக்கைகளைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுக்குமாறும் பிரதி அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டுகொண்டார்.

இதன்போது உரையாற்றிய சப்ரகமுவ மாகாண ஆளுனர் சம்பா ஜானகி ராஜரத்ன,

மாதம்பையில் இருந்து இறக்குவானைக்கு செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பு பாடசாலைக்கு செல்வதற்கு இ.போ.ச போக்குவரத்து சேவை முறையாக இயங்குவதில்லை என்றும் இதனால் தாம் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் பாடசாலை மாணவர்களிடமிருந்து தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

நாம் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
எனவே மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது எங்களது பொறுப்பாகும்.

இதை கருத்தில் கொண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள இ.போ.ச. பஸ் டிபோ பொறுப்பதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இவ்விடயத்தை இன்று கேட்டுவிட்டு நாளை பார்க்கிறோம் என்று சொல்லாது மாணவர்களின் கல்வி சேவைக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உடனடியாக கவணம் செலுத்துகுமாறும் இவ்விடயத்தில் இரத்தினபுரி மாவட்ட இ.போ.ச. பஸ் டிபோ பொருப்பதகாரிகள் பொறுப்புடன் செயல்படுமாறும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

இதன்போது இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

ராஜாங்கனையே சத்தாரதன தேரரை நீக்குவதற்கு தீர்மானம்

editor

SLPPமுக்கியஸ்தர்களுக்கு அவசர அழைப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

editor