உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் – 5 குடும்பங்கள் வெளியேற்றம்

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹேயஸ் தோட்டத்தில் (Hayes Estate) இன்றையதினம் (22) மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பங்கள் ஹேயஸ் தோட்டத்தில் (Hayes Estate) அமைந்துள்ள பிரஜா சக்தி நிலையத்தில் தஞ்சமடைடைந்துள்ளனர்.

மேற்படி தஞ்சமடைந்துள்ள ஐந்து குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை தோட்ட நிர்வாகம், கொலன்ன பொலிசார், ஹேயஸ் தோட்ட பிரஜா சக்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் உட்பட தோட்ட மக்களும் செய்து வருகின்றனர்.

மேற்படி மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கும் பேரிழப்பு

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

editor

நெல்லுக்கான உத்தரவாத விலை இந்த வாரம் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor