உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது.

இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட ஊழியர்கள் 166 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவின் வேண்டுகோளுக்கினங்க இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்றை ஒழிப்பதற்கு இலங்கை இராணுவத்தை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இராணுவத் தலைவரின் ஆலோசனைக்கமைய இலங்கை இராணுவத்தின் கெமுனு படை பிரிவின் தலைவர் கேணல் கே.எம்.திக்கும்புர தலைமையில் 80 இராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் (26) இரத்தினபுரி போதனா மருத்துவமனைக்கு வருகை தந்து மேற்படி வைத்தியசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

இரத்தினபுரி போதனா மருத்துவமனை கட்டிட வளாகத்தில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பை இலங்கை இராணுவம் முழுமையாக சுத்தம் செய்து வருகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கர,

இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் பணிபுரியும் தாதியர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாலிகளுக்கு சிகிச்சை சேவைகளை இடையூறு இன்றி வழங்குவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் இரத்தினபுரி போதனா மருத்துவமனைக்கு பயிற்சியை முடித்த சுமார் 50 புதிய தாதியர்களை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கொழும்பு பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் பத்து தாதியர்கள் கடந்த 26 ஆம் திகதி முதல் இரத்தினபுரி போதனா மருத்துவமனை சேவைக்காகச் சேவையில் அமர்ந்தப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜனக சேனாரத்ன, பிரதான அமைச்சின் செயலாளர் சுஜீவா போதிமான்ன, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனோஜ் ரொத்ரிகோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

ஜோன்ஸ்டன் CID இல் வாக்குமூலம்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் நாளை ஆரம்பம்

JustNow: தென்னாபிரிக்க ஜனாதிபதி அவசரமாக இலங்கை வந்தடைந்தார்!!