வகைப்படுத்தப்படாத

இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக – அமைச்சர் றிசாட்

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களின் சகல ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் கண்டறிதல் இந்த புதிய அமைப்பாளர்களின் கடமையாகும்.

Related posts

“Singapore had set an example of the need for pragmatic  thinking” – Champika Ranawaka

பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி

ஜனாதிபதியின் அதிரடி முடிவு!!!