உள்நாடுபிராந்தியம்

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 16 பேர் காயம்

ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (29) காலை 11:00 மணியளவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் விபத்தில் சிக்கியுள்ளன.

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையிலும், ஹபரணை பிரேதச மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கவிலிருந்து சிறிபுர பகுதியில் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதாகவும், தனியார் பேருந்து சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

editor

மலையகம் 200 நிகழ்வு தவறென கருதினால், நடைபயணமும் தவறுதான் – ஜனாதிபதி சந்திப்பின் பின் ஜீவன்

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது – காரணம் வௌியானது

editor