அரசியல்உள்நாடு

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக சாரதி துஷ்மந்த அண்மையில் நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமாக கடமையாற்றிய தயாசிறி ஜயசேகர அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் துஷ்மந்த பதில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சாரதி துஷ்மந்த கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  நிலையில், அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

கொழும்பு பிளவர்  வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் ஜனாதிபதியை சந்தித்த இருவரும் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

Related posts

பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor

எரிசக்தியால் பாதுகாப்பான இலங்கைக்கு வழி வகுப்போம் – ஜனாதிபதி

பல சோதனைகளுடன் சாதித்த Sensei மர்ஜான் ஹரீர்.