உள்நாடுபிராந்தியம்

இரண்டு பஸ்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து – 21 பேர் காயம்

இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பஸ், கேகாலையில் இருந்து இரத்தினபுரி ​நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 21 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

46 நாட்களில் 50 இராஜதந்திரிகளை சந்தித்த விஜித ஹேரத்

editor

இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள் -ரிஷாட்

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!