உள்நாடு

இரண்டு பதில் அமைச்சர்களை நியமனம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி இரண்டு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரித்தானியாவுக்குச் சென்றதையடுத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஜனாதிபதி உரிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை இந்த நியமனம் செல்லுபடியாகும்.

நிதி இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகமவும் பதவி வகிக்கின்றனர்.

Related posts

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியின் அசாதாரண திறமை

editor

மோட்டார் சைக்கிள் விபத்து – ஓட்டமாவடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மரணம்!

editor

10 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச

editor