சூடான செய்திகள் 1

இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) மாத்தறை நகரத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டும் துப்பாக்கி பாகங்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் பெலியத்தை, பாலடுவ மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

 

 

Related posts

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை

குண்டு வெடிப்பில் பிணையில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை

நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே தமது இலக்கு – சஜித்