அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்று ஓரத்தில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்று ஓரத்தில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (16) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் முற்றுகையிடப்பட்டது.
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதேவேளை, கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் தப்பியோடியுள்ளார் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், கசிப்பு உற்பத்திற்கு தயாராக இருந்த உபகரணங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-தில்சாத் பர்வீஸ்