உள்நாடு

இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது

தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸாருக்கு, துபாயில் தலைமறைவாக இருக்கும் ‘பாலே மல்லி’ என்ற ஷெஹான் சத்சர என்ற குற்றவாளியால் இந்தக் கொலைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

தெவினுவர, கபுகம்புர பகுதியி​ வீடொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான பசிந்து தாரக மற்றும் யோமேஷ் நதீஷன் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

Related posts

புதிய கட்சியை உருவாக்கிய சம்பிக்க : ஹக்கீம், மனோ பங்கேற்பு

வட, கிழக்கு ஹர்த்தாலுக்கு தமிழரசு பூரண ஆதரவு – சுமந்திரன்.

சிறைக்கைதிகளின் குடும்பத்தினர் கைதிகளை பார்வையிடலாம்