சூடான செய்திகள் 1

இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS|COLOMBO)- சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும்(11) முன்னெடுக்கப்படுகின்றது.

தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்று கொடுப்பதற்காக உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என சங்கத்தின் செயலாளர் ரோஹன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம், பிரதேச செயலகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அர்ச்சுனா MP யின் அதிரடி அறிவிப்பு – MP பதவி கௌசல்யாவிற்கு

editor

வீடியோ | SLMC யின் குச்சவெளி தவிசாளர் கைது!

editor

உந்துருளியும் டிப்பர் வாகனமும் மோதியதால் ஏற்பட்ட சோக சம்பவம்