விளையாட்டு

இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று

(UTV|இந்தியா ) இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று , ராஜ்கோட்டியில் பிற்பகல் 1.30க்கு இடம்பெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின், முதலாவது போட்டியில் 10 விக்கட்டுகளால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட் எலிசபர்த்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதலாம் ஆட்டநேர முடிவில், நான்கு விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

இந்திய அணி ஜூலை 5ம் திகதி இலங்கைக்கு

டோனியால் தொடர்ந்து விளையாட முடியுமா? – கிரிக்கெட் வாரியம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்கு