வகைப்படுத்தப்படாத

இரசாயன ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – சீனாவில் தனியாருக்கு சொந்தமான இரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இரசாயன ஆலையில் நேற்று ஏராளமான தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத வகையில் ஆலைக்குள் திடீரென வெடி விபத்து ஏற்ப்படத்தை தொடர்ந்து ஆலைக்குள் தீப்பற்றி எரிந்தது.

இதன் காரணமாக சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Related posts

இயந்திர துப்பாக்கிக்கு அமெரிக்காவில் தடை?

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – 2018 நுவரெலியா – நுவரெலியா பிரதேச சபை

Person shot while trying to enter school dies