உலகம்

இயல்புநிலைக்கு திரும்பிய நியூசிலாந்து

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்படும் நியூசிலாந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

மதுபான விடுதிகளை தவிர்த்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், முடித்திருத்தகங்கள், உணவகங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

10 பேர் வரை ஒன்றாக சேர்ந்து சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக அங்கு எந்த புதிய தொற்று பாதிப்பும் உறுதிசெய்யப்படவில்லை.

இதேவேளை, நியூசிலாந்தில் இதுவரை 1,497 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது – ஐ.நா பொதுச் செயலாளர் கவலை

editor

இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது – எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை – ஈரான் அறிவிப்பு

editor

விமான நிலையத்தில் வைத்து பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

editor