கேளிக்கை

இயக்குனர் தர்மசேன பத்திராஜவுக்கு பாராட்டு விழா

(UDHAYAM, COLOMBO) – படைப்புலக வாழ்க்கையில் பொன் விழாவைக் கொண்டாடும் இயக்குனர் தர்மசேன பத்திராஜ பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

பிரபல இயக்குனர் தர்மசேன பத்திராஜவின் படைப்புலக வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி அரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த பாராட்டு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

1974ம் ஆண்டு அஹஸ் கவ்வ என்ற திரைப்படத்தின் மூலம் திரு.பத்திராஜ இயக்குனராக அறிமுகமானார். அவர் பொன்மணி என்ற தமிழ் படம் உள்ளிட்ட பல படைப்புக்களை இயக்கி ஜனாதிபதி விருது உள்ளிட்ட பலவிருதுகளை பெற்றுள்ளார்.

 

Related posts

பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்

மஹத் பிராச்சி தம்பதிக்கு ஆண் வாரிசு

அனிருத் வீட்டில் மருமகளாகும் மஞ்சிமா?