சூடான செய்திகள் 1

இம் மாதம் 7ம் திகதியுடன் முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு

(UTV|COLOMBO) ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் பணி வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் ஏற்கும் காலம் எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைகிறது. இன்று வரையில் இந்த ஆணைக்குழுவிற்கு 295 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதியில் இருந்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950

ஜனாதிபதி தாய்லாந்து விஜயம்