வகைப்படுத்தப்படாத

இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்

(UTV|AMERICA)-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நமது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உங்கள்(இம்ரான்கான்) பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். எனவே தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும். சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கு அபோதாபாத் நகரில் அடைக்கலம் கொடுத்ததை பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு செய்த துரோகம் என்று கடந்த வாரம் டிரம்ப் விமர்சித்து இருந்த நிலையில் இந்த கடிதத்தை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related posts

நூற்றாண்டு பாலம் நொடிப் பொழுதில் தகர்ப்பு

Trump in North Korea: KCNA hails ‘amazing’ visit

சீனா பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்