உள்நாடு

இம்மாதம் 15ஆம் திகதி முதல் இந்த விசேட வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) – பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார் .

பாடசாலை மாணவர்களின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக இம்மாதம் 15ஆம் திகதி முதல் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்

தரம் மூன்றில் இருந்து கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரம் வரையான வகுப்புக்களின் பாடங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், பிரபல ஆசிரியர் குழாமின் பங்கேற்புடன் குறிப்பிட்ட பாடங்களைத் தொகுத்து ஒலிப்பதிவு செய்யும் நடவடிக்கை இந்நாட்களில் இடம்பெறும்.

இதன் பின்னர் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக வாரத்தில் 7 நாட்களும் வீட்டில் இருந்தவாறு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க சந்தர்ப்பம் கிட்டும். தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஒன்லைன் ஊடாகவும் இந்த வசதி கிடைக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

MT New Diamond : நட்டஈடு வழங்க இணக்கம்

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று முதல்