உள்நாடு

இன்று 18 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) –  அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்தை கூட்டு நீர் வழங்கல் திட்டத்தில் அவசர பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு அமலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைச்சு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பேருவளை, அளுத்கம, தர்கா டவுன், பெந்தர, களுவாமோதர, பிலிமானவத்தே, பம்புவால, பயகல மற்றும் மாகோனா ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

Related posts

பெறுபேற்றை அங்கீகரித்து வழங்கும் இணையத்தள சேவை அறிமுகம்

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

Online சட்டமூலம் தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு!