உள்நாடு

இன்று முதல் 33 ரயில்கள் சேவையில்

(UTV|கொழும்பு)- இன்று(01) முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 33 ரயில்களில், 11 ரயில்கள் பிரதான மார்க்கங்களிலும் 11 ரயில்கள் கரையோர மார்க்கங்களிலும் பயணிக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனை தவிர களனிவௌி மார்க்கத்தில் 6 ரயில்கள் அடுத்த வாரத்தில் சேவையில் ஈடுபடவுள்ளன.

ரயிலில் பயணிப்பதற்கு 19 ஆயிரத்து 593 பேர் முற்பதிவு செய்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

முற்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களை தவிர, மேலதிக ஆசனங்கள் காணப்படுவதால், அதில் அலுலக ஊழியர்களுக்கு பயணிக்க முடியும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்காக நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாளஅட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று இரவும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

அதிகளவான எரிசக்தி தேவை – கஞ்சன

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

editor