உள்நாடு

இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றுக்கு அமைச்சர்கள் கட்டாயம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும் இன்று (20) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) வரை அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில், பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கேள்விகள், நிலையியற் கட்டளையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள், சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் கேள்விகளுக்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இல்லாதது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு உகந்த மட்டத்தில் தலையிடுவதற்கும், விவாதங்களில் செயலூக்கமான பங்களிப்பை வழங்குவதற்கும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இன்று முதல் வெள்ளிக்கிழமை வரையிலான பாராளுமன்ற நாட்களில் கட்டாயம் ஆஜராக வேண்டிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட நாளில் சபையில் தங்க முடியாத பட்சத்தில், அமைச்சரவை அமைச்சரோ அல்லது இராஜாங்க அமைச்சரோ அது குறித்து அரசாங்கக் கட்சியின் தலைமை அமைப்பாளர் அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

பாராளுமன்ற வாரத்தில் ஒரு நாள் காலை பத்து மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை பாராளுமன்ற உத்தியோகபூர்வ அறைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!

editor

இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அலுவலகம் விரைவில் !

பாலித தெவரப்பெரும இலங்கை அரசியலில் மனிதாபிமானியாகவும், ஜனரஞ்சக அரசியல்வாதியாகவும் பேசப்பட்டவர்