உள்நாடு

இன்று முதல் மீண்டும் விற்பனைக்கு வரும் எரிவாயு சிலிண்டர்கள்

(UTV | கொழும்பு) –  இன்று முதல் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தபட்டன.

எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் (Ethyl Mercaptan) பதார்த்தம், கொள்கலனில் 14 அலகுகளாக இருக்க வேண்டும்.

இருப்பினும் தற்போது 5 அலகுகளாக உள்ளதன் காரணமாக, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேரிச்சம் பழத்திற்கான வரி குறைப்பு!

நாடு பாரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு