உள்நாடு

இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுலாகும்

(UTV | கொழும்பு) – இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் ஒரு மணிநேரமும், நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை இவ்வாறு நீடித்து, மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறாவிட்டால் மார்ச் மாத இறுதியில் மின்சார விநியோகத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.

எனவே, மாலை 6.30 முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான நேரத்திற்கு மின் துண்டிப்பு இடம்பெறும்.

பிற்பகல் 2.30 முதல் 4 கட்டங்களாக மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக இன்றைய தினம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்கினால் மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

புதிய அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று

editor

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் புதனன்று இறுதித் தீர்மானம்

 தீக்குளித்த பெண் (24 வயது)  – காப்பாற்ற சென்ற கணவனுக்கு நடந்த கதி?