உள்நாடு

இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டி விலையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இன்று முதல் நாட்டில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கவுள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையில், ப்ரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையினை அதிகரித்தமையினாலேயே குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

இதன் காரணமாகவே இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவாலும், ஏனைய துரித உணவு வகைகளின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளது.

குறித்த பண்டங்களின் விலையை அதிகரிக்க பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

இன்று மேலும் 274 பேருக்கு கொரோனா

BREAKING NEWS – G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

editor

தர நிர்ணயம் மற்றும் உற்பத்திதிறன் தேசிய சம்மேளனத்தின் 04 தங்கப் பதக்க விருதுகளை வென்றுள்ள Cap Snap Lanka

editor