உள்நாடு

இன்று முதல் தனியார் பேரூந்து சேவைகள் வழமை

(UTV | கொழும்பு) –   இன்று முதல் தனியார் பேரூந்துகள் வழமை போன்று போக்குவரத்தில் ஈடுபடும் என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

தனியார் பேரூந்துகளுக்கு தற்சமயம் எரிபொருள் போதியளவு கிடைக்கின்றது. எனவே எதிர்காலத்தில் எதுவித தடையும் இன்றி தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேரூந்துகளது போக்குவரத்து சேவைகள் 50 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]

இந்தியன் இழுவை மடி படகையும் உள்ளூர் இழுவைமடி படகுகளையும் தடுக்க கோரி யாழில் மீனவர்கள் போராட்டம்….!

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு