உள்நாடு

இன்று முதல் கடுமையாக அமுலாகும் பயணக்கட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, கல்கிஸ்ஸை மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் வைத்து இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன.

இந்த ஸ்டிக்கர்கள் ஒருநாள் மாத்திரமே செல்லுபடியாகும்.

ஒரே வாகனம் பலமுறை சோதனைக்கு உள்ளாக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இன்று ஒட்டப்படும் ஸ்டிக்கர் இன்று மட்டும் செல்லுபடியாகும் என்பதோடு, நாளை வேறொரு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன் போது தெரிவித்தார்.

அத்துடன் போலியான தகவல்களை வழங்குகின்றவர்களின் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படாது என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

Related posts

உள்நாட்டு மதுபானங்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் அதிகரிப்பு

சஜித் பிரேமதாச தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் [VIDEO]

  02 வயது குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை