உள்நாடு

இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

(UTV | கொழும்பு) – குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில், தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டுதல்களிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.

திருமண மண்டபங்களில் அவற்றின் திறனில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் அதிகபட்சம் 200 பேருக்கு மிகாமல் திருமண வைபவங்களை நடத்த முடியும் என்றும் திறந்த வெளி எனின், 250 பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவகங்களில் அவற்றின் திறனில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் அதிகபட்சம் 100 பேர் உள்ளிருந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர். திறந்த வெளியாயின் 150 பேர் அனுமதிக்கப்படுவர்.

பாடசாலைகளைத் திறப்பது கல்வி அமைச்சினாலும் பல்கலைக்கழகங்களைத் திறப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினாலும் தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், சாதாரண கொள்ளளவில் 50 சதவீதினரைக் கொண்டு பிரத்தியேக வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

வெளியான புதிய நடைமுறைகள் கீழ்வருமாறு;

Related posts

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

ஜனாதிபதி அநுர தலைமையில் 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

editor

கந்தளாய் குள வான் கதவுகள் திறக்கப்படலாம் – அச்சத்தில் மக்கள்.