சூடான செய்திகள் 1

இன்று மீண்டும் விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவிக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (18) மீண்டும் விசேட தெரிவுக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது. பிற்பகல் 02 மணியளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பிரதிசபாநாயகர் தெரிவித்தார்.

இதன்படி இன்று நடைபெறவுள்ள விசேட தெரிவுக்குழு அமர்வின் போது மேலும் ஒரு அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

 

Related posts

விகாரையில் கெளரவிக்கப்பட்ட முஸ்லிம்கள் (படங்கள்)

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டது

கொழும்பு- நகர மண்டபம் உள்ளிட்ட வீதிகளில் கடும் வாகன நெரிசல்