உள்நாடு

இன்று மின்சார விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) –  இன்றைய தினம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாளாந்த மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ மற்றும் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்கள் நேற்றுமுன்தினம் முதல் மூடப்பட்ட போதிலும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு 10,000 மெட்றிக் டன் எரிபொருளை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நேற்று இணக்கம் தெரிவித்திருந்தது.

இதேவேளை, மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் காமினி லொக்குகே நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும், நாட்டில் அமைந்துள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இயங்குவதற்கு தேவையான எரிபொருள் இன்மையால் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் நேற்று பிற்பகல் தெரிவித்தது.

அதன்படி நேற்று மதியம் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நான்கு கட்டங்களாக ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டவிரோதமாக அனுமதி – ஜோஸப் ஸ்டாலின்

வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு குறித்து ரிஷாத் தரப்பு ஞாயிறன்று தீர்மானம்