உள்நாடுபிராந்தியம்

இன்று மாலை பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை – டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டின் இலக்காக இருந்த நபர், தாக்குதலின் போது தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை பதிவாகவில்லை என்பதுடன், மேலும் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

செவ்வாய் முதல் மின்சக்தி அமைச்சராக டலஸ் இல்லை – டலஸ்

வீடியோ | போக்குவரத்து விதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

editor

13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!