உள்நாடு

இன்று மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) –   மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதனிடையே, தீவின் மற்ற பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களின் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

மலையகத்தில் பிரமாண்டமான பொங்கல் விழா !

தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது

editor

இன்று முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு