உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) –   இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு பதவி விலகாததை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

புகையிரத தொழில்நுட்ப சேவைகள் தொழிற்சங்க குழுவின் செயலாளர் சம்பத் ராஜிதஇது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்; இலங்கை புகையிரத சேவையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் சேவையில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பொதுமக்களின் வாழ்வை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது, பொதுமக்கள் பட்டினியில் வாழ வழி வகுத்துள்ளது, அவர்களின் நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் கோபத்தை உருவாக்கியது என ராஜித கூறினார்.

அனைத்து துறைகளின் தொழிற்சங்கங்களும் மே 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அனைத்து தொழிற்சங்கங்களும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகுமாறு கோரி வருவதாகத் தெரிவித்த ராஜித, ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

தற்போதைய பொருளாதார நிலைமைகள் சாதகமாக இல்லை என்று கூறிய அவர், தொழிற்சங்கங்கள் அரசு பதவி விலக 24 மணி நேர அவகாசம் அளிக்கும் என்றும் கூறினார்.

அதன்பின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் வரும் 11ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டினுள் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்த ஜப்பான் நிதியுதவி

editor

2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு

editor

UPDATE – பேரூந்து விபத்தில் ஒருவர் பலி 16 பேர் காயம்