எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், விரிவுரைகள், வினாத்தாள் விநியோகங்கள் உள்ளிட்டவை இன்று (07) நள்ளிரவு 12.00 மணியுடன் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
இந்த விதிகளை மீறும் வகையில் யாராவது செயல்பட்டால், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சைகள் சட்டம் மற்றும் பிற விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சை 2787 பரீட்சை மையங்களில் நடைபெறும். 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள், 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.