உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் திருமண நிகழ்வுகளை நடத்த தடை

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும்.

இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    

Related posts

கொரோனா – ஜனாதிபதி செயலணி அவசர விசேட கலந்துரையாடல்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு