சூடான செய்திகள் 1

இன்று தேசிய துக்கதினம்…

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக இன்று காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடணப்படுத்தியுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை!

அரசியல் நெருக்கடியை தீர்க்க தலைவர்கள் முன்வரவேண்டும்

பிரதமர் ஹரிணி தலைமையில் சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால, முன்னாள் பிரதமர் தினேஷ் கலந்துகொண்டனர்

editor