உள்நாடு

இன்று கறுப்புப் போராட்ட தினம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து இன்று (20ஆம் திகதி) நடத்தப்படும் கறுப்புப் போராட்ட தினத்தையும், ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தையும் ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவில்லையென்றால் நாடு முழுவதும் மே 6ஆம் திகதி ஹர்த்தாலுக்குச் செல்ல நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மதத் தலைவர்கள் என அனைவரும் இதில் ஈடுபடவுள்ளதாக அதன் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்தாவிட்டால் அரசாங்கம் வெளியேறும் வரை ஹர்த்தால் தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 550 வலையமைப்புகள்

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு இன்று