அரசியல்உள்நாடு

இன்று உத்தரவாத விலையும் இல்லை – விவசாய மானியங்களும் இல்லை – நாடு முழுவதும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுபாடு – சஜித் பிரேமதாச

இன்று நமது நாட்டில் விவசாயம் செய்வது கடினமானதொன்றாக மாறிவிட்டது. உயர்தர உரமோ அல்லது உர மானியங்களோ கிடைத்தபாடில்லை. மலிவு விலையில் வேளாண்மைக்கான இரசாயன பொருட்கள் கிடைத்தபாடில்லை.

உபகரணங்களின் விலை அதிகரித்து வருவதற்கு மத்தியில், உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலும், யானை-மனித மோதல் போன்ற காரணங்களால் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு, சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளை செய்து வந்த போதிலும் கூட, இன்று நெல் அறுவடைக்கு உத்தரவாத விலை கூட கிடைக்காத நிலையே காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நெல்லின் உத்தரவாத விலை கிலோ ஒன்றுக்கு ரூ.120 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தேர்தல் காலத்தில், உத்தரவாத விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.150 ஆக, சட்டங்கள் மூலம் உறுதிப்படுத்தித் தருவோம் என்று இன்றைய ஆளும் தரப்பினர் முழங்கினர்.

இன்று நெல்லை ரூ.90-95க்கே கொள்வனவு செய்கின்றனர். இன்று, உத்தரவாத விலை களத்தில் யதார்த்தமான ஒன்றாக மாறவில்லை.

வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே காணப்படுகின்றன. அவ்வாறே உர மானியமும் காணப்படுகின்றன. இவற்றிக்கு மத்தியில் விவசாயிகள் பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லைக் கூட சுரண்டும் நிலையை நாடு அடைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அனுராதபுரம், விலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓயாமடுவ கிராமத்தில் ஸ்ரீ உத்தரவாபி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய யசோதரா மகா தேவியின் உருவச்சிலை அறை மற்றும் பத்தினி விகாரை என்பவற்றின் திறப்பு விழாவில் இன்று (14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கான நிதி நன்கொடையை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருமதி குருகே இரோஷா தயானி வழங்கினார். இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் பாரியார் திருமதி ஜலனி பிரேமதாச உள்ளிட்ட மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் வறுமையை உருவாகி, பல கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளன. பணம் இல்லாமல், நுகர்வு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் குறைந்துள்ளன.

2028 முதல் ஆண்டுதோறும் அ.டொலர் 5.6 பில்லியன் கடனை அடைக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 5% ஆக பேணிச் செல்ல வேண்டும்.

என்றாலும், இது நடந்தபாடில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு பதில்களை தேட வேண்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலவச மருத்துவம் வெறும் பெயரளவில் மாத்திரமே… நாடு முழுவதும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுபாடு நிலவுகின்றன.

இன்று, நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றன. அரச மருத்துவமனைகளில் கூட போதிய மருந்துகள் இல்லை. எனவே, தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்குவதற்கு நிறைய பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இலவச மருந்துகளை வழங்க முடியாவிட்டால், இலவச சுகாதாரக் கொள்கை பயனற்றதாகிவிடும். விவசாயத்தைப் போலவே சுகாதாரமும் ஓர் அடிப்படை மனித உரிமையாகும். எனவே சுகாதாரத் துறைக்கு கூடிய பக்கபலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் மட்டுமே அரசாங்கம் விவசாயியை நினைவில் வைத்திருந்தது.

இன்று விவசாயிகள் மறந்து விடப்பட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக விவசாயிகளை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்தாலும், அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி விவசாயிகளைப் பாதுகாக்க முன்நிற்கும் போலவே இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாடுபடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாய சமூகத்தை வலுப்படுத்த அவுஸ்திரேலிய செல்வந்தர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தாருங்கள்.

அனுராதபுரம் மாவட்டத்தில் விலச்சிய போன்ற மிகவும் கஷ்ட பிரதேசத்தில் காணப்படும் 17 கிராம சேவையாளர் பிரிவுகளில் கடினமான வாழ்க்கை வாழும் மக்கள் இருப்பதால், 17 ஆஸ்திரேலிய செல்வந்தர்களை இந்த 17 கிராமங்களுடன் இணைத்து, அவர்களின் விவசாயத் தொழிலை வாழ்வாதாரமாக மாற்ற மூலதன பலத்தைப் பெற்றுத் தருமாறும், விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை அடிப்படையில் கடன்களை வழங்கி, அவற்றை சுழலும் நிதியாக மாற்றுவதன் மூலம் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்து 17 கிராம சேவையாளர் பிரிவுகளையும் ஒன்றிணைத்து கிராமிய நிதியத்தை உருவாக்கும் ஒரு திட்டத்தை தாபிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கேட்டுக் கொண்டார்.

Related posts

IMF யின் நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை – உதய கம்மன்பில.

தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைப்படும்

 வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்