உள்நாடு

இன்று இரவு மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் இரவு நேரத்தில் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A,B மற்றும் C முதலான வலயங்களுக்கு மாத்திரம், இன்று பகல் நேரத்தில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், நாளை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பு நேர அட்டவணையின்படி, அந்தந்த பகுதிகளில் மின்துண்டிப்பு அமுலாகக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால், சில மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளமையால், மின்துண்டிப்பை அமுலாக்க நேரிட்டுள்ளது.

Related posts

இன்று ஆர்ப்பாட்டம் – பொலிஸாரின் விசேட அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை

இன்று முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்!