உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று இரவு பொரளையில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் வைத்தியசாலையில்

பொரளை – சஹஸ்புர பகுதியில் இன்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டி56 ரக துப்பாக்கியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா நிவாரணம்

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக சார்ள்ஸ் மீண்டும்

தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

editor